செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (17:55 IST)

பேனர் விவகாரம் : மாநகராட்சி உத்தரவுக்கு இடைக்காலத் தடை ! நீதிமன்றம் அதிரடி

அனுமதியின்றி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறையுடன், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அணமையில் அறிவித்திருந்தது. இந்நிலையில் மாநகராட்சி அறிவிப்பின் பேரில் செப்டம்பர் 19 ஆம் தேதி அனுப்பிய இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி  பேனர் நிறுவனம், நீதிமன்றத்தில்  மனு  தாக்கல் செய்தது. 
அந்த மனுவில் கூறியுள்ளதாவது :
 
விதிமீறல் பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிமே தவிர நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், பேனர் ஆர்டர் தருபவர்களிடம் விவரங்கள் கேட்க பிறகே ஆர்டர் பெறுவோம் என பேனர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், அனுமதியின்றி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறையுடன், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற  சென்னை மாநகராட்சியின் உத்தரவுக்கு, இன்று, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.
 
மேலும், இதுகுறித்து,சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை அக்டோபர் 23க்கு ஒத்திவைப்பதாக  உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.