ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (10:27 IST)

அநியாயம் பண்றீங்கய்யா..! அம்மன் கோவில் திருவிழாவில் மியா கலீஃபாவுக்கு பேனர்! - வைரல் போட்டோ!

Amman Temple Banner

ஊர் முழுக்க ஆடி மாத அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் குருவிமலை குறும்பு இளைஞர்கள் சிலர் வைத்துள்ள பேனர் வைரலாகியுள்ளது.

 

 

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சி.காவும், சூரியும் தங்கள் அருகில் பாலிவுட் நடிகைகள் இருப்பது போல பேனர்களை வைத்திருப்பார்கள். இதுபோன்ற பேனர்கள் வைப்பது தற்போது பல ஊர்களில் இளைஞர்கள் இடையே புது ட்ரெண்டாக இருந்து வருகிறது. ஆனால் காஞ்சிபுரம் குருவிமலையை சேர்ந்த இளைஞர்கள் ஒருபடி மேலே போய் ஒரு பேனரை வைத்துள்ளனர்.

 

ஆடி மாதம் அம்மன் கோவில்கள் பலவற்றிலும் திருவிழா களைகட்டி வருகிறது. அவ்வாறாக காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலையில் உள்ள விநாயகர் கோவிலில் வளாகத்தில் உள்ள நாகாத்தம்மன், செல்லியம்மனுக்கு விழா எடுக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவிற்கு பக்தர்களை வரவேற்று பல பேனர்கள் அடிக்கப்பட்டுள்ளன.

 

அதில் அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் அடித்த பேனரில் அம்மனுக்கு பிரபல அந்தரங்க பட நடிகை மியா கலீஃபா பால் குடம் எடுத்து வருவது போல பேனரில் அச்சடித்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், இப்படி அநியாயம் பண்றீங்களேய்யா என நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் செய்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K