தொடர்புடைய செய்திகள்
- வங்கி மோசடி: சைபர் க்ரைம் காவல்நிலையத்தின் முக்கிய எச்சரிக்கை!
- திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்கள் செல்லுமா? தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் அறிவிப்பு
- "வலிமை" பாடல் வெளியீடு - கொண்டாட துவங்கிய தல பேன்ஸ்!
- ஆகஸ்ட் மாதத்தில் அதிக லீவ் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
- புதிய வேலைவாய்ப்பு முகாம்கள் … முதல்வர் முக ஸ்டாலின்
2021ல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை கிடைக்காதா? அதிர்ச்சி விளம்பரம்!
2021ல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை கிடைக்காதா? அதிர்ச்சி விளம்பரம்!
2021ல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என தனியார் வங்கி ஒன்றின் விளம்பரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பிரபல தனியார் வங்கி ஒன்று தனது மதுரை கிளைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை ஒரு முன்னணி நாளிதழ் ஒன்றில் அளித்திருந்தது. இந்த விளம்பரத்தில் 2021 ஆம் ஆண்டு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது
இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 2021 ஆம் ஆண்டு டிகிரி படித்தவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. 2021ஆம் ஆண்டு டிகிரி முடித்தவர்கள் ஆன்லைன் வகுப்பில் மட்டுமே படித்தவர்கள் என்பதும் ஆன்லைனில் மட்டுமே தேர்வுகள் எழுதியவர்கள் என்பதால் அவர்களுடைய தகுதி திறன் கொடுத்து சந்தேகமடைந்த இந்த தனியார் வங்கி இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து அந்த தனியார் வங்கி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு டிகிரி முடித்தவர்களும் தகுதி உண்டு என்பதற்கு பதிலாக தகுதி இல்லை என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தவறுக்கு வருந்துவதாகவும் 2021ல் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது
அடுத்த கட்டுரையில்
