பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம் வழித்தடத்தில் ரயில்கள் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?
பெங்களூரு ஓசூர் தர்மபுரி சேலம் வழித்தடத்தில் இயங்கி வரும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி இருந்து சேலம் தர்மபுரி வழியாக பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விட்டது. கிருஷ்ணகிரி அருகே தடம் புரண்டதை அடுத்து ரயில்வே பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தடம் புரண்ட பெட்டிகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து காரணமாக பெங்களூரு ஓசூர், தர்மபுரி சேலம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் - எர்ணாகுளம் பெங்களூரு - சேலம் பெங்களூர் - காரைக்கால் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் மீட்பு பணிக்கு பிறகு இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.