மதுபோதையில் தாய விளையாட்டு; கொலையில் முடிந்த தகராறு! – அவினாசியில் பரபரப்பு!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 6 ஜூலை 2021 (11:21 IST)
அவிநாசியில் மதுபோதையில் நண்பர்கள் சிலர் தாயம் விளையாடியபோது ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள ராயன் கோவில் காலணி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் அவரை பிரிந்து வாழ்ந்து வரும் அவர் சாலையில் வசிக்கும் சிலருடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று இரவு நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதுடன், போதையில் தாய விளையாட்டு விளையாடியுள்ளனர். அப்போது நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஒருவர் ஜெகநாதனை கல்லால் அடித்துள்ளார். இதனால் ஜெகநாதன் மயங்கி விழுந்ததும் மற்றவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் ஜெகநாதன் கிடப்பதை அக்கம்பக்கத்தினர் போலீஸுக்கு தெரிவித்த நிலையில் ஜெகநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :