1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (22:26 IST)

ஆவணி மாத கிருத்திகை நிகழ்ச்சி – மகாதீபாராதனையில் ராஜ அலங்காரத்தில் முருகன்

murugan
கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய முருகனுக்கு ஆவணி மாத கிருத்திகை நிகழ்ச்சி – மகாதீபாராதனையில் ராஜ அலங்காரத்தில் முருகன் காட்சியளித்தார்.
 
கரூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்து வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் அருகே வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டும், அதுவும் வெள்ளிக்கிழமை வரும் இந்த கிருத்திகையை முன்னிட்டு, ஆலயத்தின் பரிவார தெய்ங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய முருகனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பல்வேறு நகைகள் பூட்டப்பட்டு, தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய முருகன் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.

ஆலய ஸ்தானிக்கர் வசந்த் சர்மா வேத மந்திரங்கள் முழுங்க, முருகனின் திருப்புகழை, பார்த்தசாரதி என்கின்ற முருகப் பக்தர், முருகனின் திருப்புகழை பாடி, மனமுருகி பாடினார். அதனை தொடர்ந்து முருகனுக்கு கோபுர ஆரத்தி, கலச ஆரத்தி, கற்பூர ஆரத்திகளை தொடர்ந்து, மகா தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட்த்திலிருந்து ஏராளமான பக்தர்கள் காலை முதல் இரவு வரை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஆலய ஸ்தானிக்கர் திரு வசந்த் சர்மா சிறப்பாக செய்திருந்தார்.

முன்னதாக ஆலயத்தில் உள்ள பரிவாரதெய்வங்கள் மற்றும் மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகருக்கு தங்க அங்கி அணிந்தும், உற்சவர் சித்திவிநாயகருக்கும், அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா, ஸ்ரீ காயத்திரி தேவி, நவக்கிரஹங்கள் மற்றும் சுவாமி ஐயப்பன் ஆகியோருக்கும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் காட்டப்பட்டது.