திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:01 IST)

மனைவி தயாரித்த மாஸ்க்கை இலவசமாக வழங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்!

மனைவி தயாரித்த மாஸ்க்கை இலவசமாக வழங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்!
தனது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தனது மனைவி தயாரித்த மாஸ்க்கை இலவசமாக வழங்கி வரும் ஆட்டோ டிரைவர் ஒருவர் குறித்த தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவசமாக மாஸ்குகளை வழங்கி வருகிறார். இந்த மாஸ்குகளை அவரது மனைவியே வீட்டில் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மிழகத்தில் மாஸ்குகள் தட்டுப்பாடு ஏற்பட்ட போது அவரது மனைவி வீட்டிலேயே மாஸ்குகள் தயாரிக்க தொடங்கினார். இதுவரை 500க்கும் அதிகமான மாஸ்குகளை அவர் தயாரித்து கொடுத்ததாகவும் அந்த மாஸ்குகள் அனைத்தையும் அவரது கணவர் தனது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவசமாக கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதனையடுத்து அந்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது மனைவிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது