வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (13:23 IST)

வீட்டுக்குள் புகுந்து ஏடிஎம் கார்டு திருட்டு – வித்யாசமாகப் பணம் எடுத்த கும்பல் !

சென்னை அமைந்தகரையில் வீட்டில் புகுந்து ஏடிஎம் கார்டுகள் மற்றும் செல்போனைத் திருடிய கும்பலைப் போலிஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரையில் வசிக்கும் காலித், நவுத், பட்லூ, ரீகன் ஆகிய நான்கு டெல்லியைச் சேர்ந்த வாலிபர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன் தினம் தங்கள் வீட்டுக் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர். அப்போது அவர்கள் வீட்டுக்கு வந்த கும்பல் ஒன்று அவர்கள் ஏடிஎம் கார்டுகள் மற்றும் செல்போனைத் திருடிச் சென்றுள்ளது.

காலையில் எழுந்ததும் செல்போன்கள் தொலைந்ததைக் கண்டுபிடித்த அந்நால்வரும் வங்கிக்குப் புகாரளிக்க சென்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே காலித் என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.16,000-க்கு ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கப்பட்டு இருப்பதாகவும்,ரூ.1,600-க்கு ஒரு செல்போன் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாகவும் வங்கியில் கூறியுள்ளனர். மொபைல் போனையும் திருடிச் சென்றதால் அதன் மூலம் ஓடிபி வைத்து ஷாப்பிங் செய்துள்ளனர்.

இதையடுத்து போலிஸில் புகாரளிக்க போலிஸ் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.