புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: நாமக்கல் , சனி, 25 மே 2024 (14:35 IST)

அருள்மிகு ஸ்ரீ பட்டை பெருமாள் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாமி கோவிலில் - மூன்றாம் ஆண்டு மஹா ஸம்ப்ரோக்ஷ்ண விழா!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பட்டை பெருமாள் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாமி கோவில் உள்ளது. 
இக்கோவிலில் முக்கிய விசேஷ தினங்களில் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.  
 
அதன்படி மூன்றாம் ஆண்டாக ஸ்ரீ பட்டை பெருமாள் சுவாமி கோவிலில் மஹா ஸம்ப்ரோக்ஷ்ண விழா மற்றும் சம்மச்சரா அபிஷேகம் சிறப்பு பூஜை விழா நடைபெற்றது. 
சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாமி குழந்தை வடிவில் மூலவராக அவதரித்து அருள் பாலித்த  வைகாசி பௌர்ணமி திதி விசாக நட்சத்திரம் முன்னிட்டு சந்தான கோபால கிருஷ்ணருக்கும் ஸ்ரீ மகாலட்சுமி தாயார் ஆகியோருக்கு திருமஞ்சனம் உற்சவம், வேதிகா அர்ச்சனை, மூர்த்தி ஹோமம், மஹா சுதர்சனை ஹோமம், போன்ற பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று பின்னர் மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் ,இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும்  சாமிக்கு மகா தீபாரணை நடைபெற்றது. 
தொடர்ந்து பெண்கள், ஆண்கள்,  அனைவரும் கோமாதா பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். 
 
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு ஹோம வழிபாடு மற்றும் பூஜையை ஓபுளிசாமி சாஸ்திரிகள், ஹரி சாஸ்திரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.