1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (11:40 IST)

இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமல் சாலை: உதவிப்பொறியாளர் சஸ்பெண்ட்!

two wheeler
வேலூரில் இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமல் சிமெண்ட் சாலை அமைத்த உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் சாலையில் இரவோடு இரவாக சிமெண்ட் சாலை போடப்பட்டது. இந்த சாலை போடும் போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீதும் சாலை போடப்பட்டுள்ளது
 
இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலான் நிலையில் தற்போது வேலூர் மாநகராட்சி ஆணையர் இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ளார் 
 
இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமல் சாலை அமைத்த விவகாரத்தில் உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என வேலூர் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.