1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 15 ஜூலை 2023 (23:34 IST)

ஆசிய தடகள கோப்பை: 400மீ தடை தாண்டுதலில் தமிழக வீரர் வெண்கலப் பதக்கம் - சீமான் வாழ்த்து

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாட்டினைச் சேர்ந்த தடகளவீரர்  சந்தோஷ்குமார் தமிழரசன், 400மீ தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கு சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

’’தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாட்டினைச் சேர்ந்த தடகளவீரர் அன்புமகன் சந்தோஷ்குமார் தமிழரசன், 400மீ தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ள செய்தியறிந்து மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.

ஆசிய தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மகன் சந்தோஷ்குமார் தமிழரசனுக்கு என்னுடைய பாராட்டுகள்!

தன்னுடைய அயராத முயற்சியினால் தனித்திறனை வளர்த்து, தமிழ் மண்ணிற்கும், இனத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அன்புமகன் சந்தோஷ்குமார் மேலும் பல பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று சாதனை புரிய  என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!’’ என்று தெரிவித்துள்ளார்.