’கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை’ திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
#கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இத ஒருபகுதியாக மதுரையில், 2 இலட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், குரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 இலட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
இதையொட்டி, இன்று மதுரைக்கு வருகை தந்துள்ள முதல்வர் முக.ஸ்டாலின், அங்கு நூலக வளாகத்தில் கருணா நிதிக்கு அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையை திறந்துவைத்தார். இதையடுத்து, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இந்த திறப்பு விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஆகியோர் பங்கேற்றனர்.