திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஜூலை 2018 (18:14 IST)

ஜெ. மரணம் தொடர்பாக ஆறுமுகசாமியின் முடிவால் அதிர்ச்சியில் அப்பல்லோ

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி விசாரணை நடத்த உள்ளார்.

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
ஆறுமுகசாமி அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு வேண்டும் என்று ஆணையத்தில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதையடுத்து வரும் 29ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் விசாரணை நடத்த உள்ளதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
ஜெயலலிதா மரணத்திற்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பல்வேறு சர்ச்சைகளும், கேள்விகளும் உள்ளது. அவர் சிகிச்சை பெற்று வந்தபோது யாரையும் பார்க்க உள்ளே அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.