வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (16:23 IST)

அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகளும் மீட்பு

Robbery
சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை போன நிலையில் அந்த நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டு விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்து 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால் இந்த வங்கியில் அடமானம் வைத்திருந்த பொதுமக்களின் நகைகள் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்தது
 
இந்த நிலையில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் பணியாற்றிய முருகன் என்பவர் தலைமையில் தான் இந்த கொள்ளை நடந்துள்ளது என்பதை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்
 
அதனை அடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதும் முதல் கட்டமாக 28 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அடுத்தடுத்து நடந்த கைதுகள் மற்றும் மீட் நடவடிக்கையால் தற்போது கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளும் மீட்கப்பட்டதாகவும் உரிய நடவடிக்கைகளுக்குப் பின்னர் அந்த நகைகளை வங்கியில் ஒப்படைக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.