புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (08:02 IST)

மன அழுத்தத்தில் ராணுவ வீரர் … சக வீரரை சுட்டுக் கொலை - சென்னையில் பரபரப்பு !

சென்னை ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் பணிமாற்றலாகி வந்த ராணுவ வீரர் ஒருவர் சக ராணுவ வீரரை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

சென்னையை அடுத்து அமைந்து புறகர் பகுதியான ஆவடியில் பீரங்கிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கின்றது. இந்த தொழிற்சாலையில் பல மாநிலங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் திரிபுராவைச் சேர்ந்த நிலம்பசின்ஹா  என்ற பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்,  ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஜேஸ்குமார் என்ற சகவீரரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

மேகலாயாவில் பணிபுரிந்த அவர் சென்னைக்கு பணிமாற்றலாகி ஒருநாள்தான் ஆகிறது. கீமோஃபீனியா எனும் மனநோயால் பாதிக்கபட்டவர் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து நிலம்ப சின்ஹாவை கைது செய்துள்ள போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.