திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2020 (15:32 IST)

ரஜினியுடன் தமிழருவி மணியன் - அர்ஜுன மூர்த்தி சந்திப்பு: அரசியல் அறிவிப்பு உண்டா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி தான் கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தற்போது அவர் முழு ஓய்வில் இருக்கிறார் 
 
ஒரு வாரம் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்படும் எந்த செயலையும் அவர் செய்யக்கூடாது என்றும் குறிப்பாக கொரோனா பரவும் வகையில் எந்த செயலலிலும் ஈடுபடக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் 
 
இந்த நிலையில் முழு ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்தை தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகிய இருவரும் சந்தித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்த இருவரும் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது 
 
ரஜினியின் நெருக்கமான வட்டாரங்களில் இருந்து வெளி வந்த தகவலின்படி திட்டமிட்டபடி டிசம்பர் 31ஆம் தேதி கட்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்கள் முன்போ அல்லது டிவிட்டர் மூலம் அறிவிப்பு செய்வது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது