1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2017 (19:35 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு - அர்ஜூன் சம்பத் விளாசல்

நடிகர் கமல்ஹாசன் நடுவராக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது. இதில் நடிகர், நடிகைகள்  உட்பட 15 பேர் பங்கு பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாட்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.  


 

 
இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நம் தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கிறது என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு தனியார் வார இதழுக்கு பேட்டியளித்துள்ள அவர் “பிக்பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க வர்த்த நோக்கத்துடன், டி.ஆர்.பி.யை அதிகரிப்பதற்காக உருவான ஒரு நிகழ்ச்சி. இது வெளிநாடுகளில் வேண்டுமானால் பொருத்தலாம். ஆனால், நம் தமிழ் கலாச்சாரத்திற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் உகந்தது அல்ல. 


 

 
இதில் பங்கு பெற்ற ஜூலியான, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மோடி, சசிகலா, பன்னீர் செல்வம் ஆகியோருக்கு எதிராக அருவருக்கத்தக்க வகையில் கோஷங்கள் எழுப்பியவர். அவர் ஒரு தமிழ் பெண்ணே அல்ல. அவருக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?. ஜல்லிக்கட்டு போராட்டம் தடியடியில் முடிந்ததற்கு ஜூலி போன்ற நபர்கள்தான் காரணம். இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும்.


 

 
மேற்கத்திய நாகரீகத்தை தமிழ் மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறார்கள். அதனால்தான் அந்த நிகழ்ச்சியை எதிர்க்கிறோம். மற்ற நடிகர், நடிகைகளை விட்டு விடுவோம். அங்கே ஜூலி மாதிரியான பெண்ணுக்கு என்ன வேலை. அவரை புரமோட் செய்ய நினைக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.