அரியலூரில் 19 பேருக்கு கொரோனா உறுதி! சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!
சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட அரியலூர்
அரியலூர் மாவட்டட்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்தவர்கள் 19 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கம்மியாக இருந்த மாவட்டங்களில் அரியலூரும் ஒன்றாக இருந்தது. அங்கு நேற்றுவரை 8 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சையில் 4 பேர் குணமாகி வீடு திரும்பினர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்ற 20 பேரில் 19 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் அவர்களோடு பழகியவர்கள் மற்றும் குடும்பத்தினரையும் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதன் மூலம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்த அரியலூர் மாவட்டம் சிவப்பு மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.