ஜெயலலிதா, மா.சுப்பிரமணியன் கடும் வாதம்: அனல் பறந்த பேரவை!
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியனுக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே மோனோ ரயில், மெட்ரோ ரயில் தொடர்பாக கடும் வாதம் நடைபெற்றது.
மோனோ ரயில் தொடங்குவதாக சொல்லிவிட்டு மெட்ரோ ரயில் திட்டம் மட்டுமே செயல்படுத்துவது ஏன் என்று திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
திமுக உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, மெட்ரோ ரயில் திட்டப்பணி தொடங்கி நடந்து வருவதால் பாதியில் நிறுத்த முடியாது என்றார். மேலும் ஒரு திட்டத்தை தொடங்குவது, முடிப்பதில் யார் வல்லவர்கள் என்பதை வீராணம் திட்டம் ஒன்று போதும் எனவும் கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த மா.சுப்பிரமணியன், பேச அனுமதி கோரினார். ஆனால் சபாநாயகர் தனபால் அதற்கு அனுமதி மறுத்துவிட்டார். இதனால் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.