முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட முக்கிய புள்ளிகள் தப்பவிடப்படுகிறார்களா ? - தினகரன்
குரூப் 2 ஏ தேர்வு முறைக்கேடு தொடர்பாக தீபக், வினோத் குமார், அருண்பாலாஜி, தேவி உட்பட இதுவரை 14 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் தேர்வில் வெற்றி பெற ரூ.8 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரியவந்தது.
இந்நிலையில் குரூப் 2 ஏ முறைக்கேட்டில் கார்த்திக் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளது. இவர் எழிலகத்தில் வணிகத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிபவர் என தெரியவருகிறது.
இந்நிலையில் இது குறித்து, - அமமுக பொதுச்செயலாளர் தினகரன் , முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட முக்கிய புள்ளிகள் தப்பவிடப்படுகிறார்களா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.