திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜூன் 2018 (15:48 IST)

8800000000 என்றால் என்ன? அரவிந்தசாமி போட்ட புதிருக்கு விடை

நடிகர் அரவிந்தசாமி தனது டுவிட்டரில் அவ்வப்போது சமூக அக்கறையுடன் கூடிய கருத்துக்களை பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று அவர் தனது டுவிட்டரில்  சில மணி நேரங்களுக்கு முன் 8800000000 என்ற எண்ணை மட்டும் பதிவு செய்து அதற்கு என்ன அர்த்தம் என்று கூறாமல் ஒரு புதிரை போட்டார்.
 
இதற்கு டுவிட்டர் பயனாளிகள் பலர் பலவிதமான பதில்களை அளித்தனர். இது உங்களுடைய பேங்க் பேலன்ஸ் என்று ஒருவரும், இது உங்கள் போன் நம்பர் என்று ஒருவரும், 'பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் வசூல் என்று ஒருவரும், உங்கள் அடுத்த படத்திற்கான சம்பளம் என்று ஒருவரும் என பலரும் பலவிதமான ஊகங்களை இந்த புதிருக்கு பதிலாக தந்தனர்.
 
கடைசியில் அரவிந்தசாமியே இந்த புதிருக்கு விடை அளித்துள்ளார். 8800000000 கிலோ பிளாஸ்டிக் ஒவ்வொரு வருடமும் கடலில் கலக்கப்படுகின்றது என்று அரவிந்தசாமி கூறியுள்ளார். இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்த கருத்தை கூறியுள்ள அரவிந்தசாமி, அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலக்கப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை அவர் குறிப்பிட்டுள்ளார்.