ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (13:00 IST)

நீண்ட காலம் கழித்து ”தல” காட்டிய அஜித்! – வைரலாகும் புகைப்படம்!

Ajithkumar
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகரான அஜித், தயாநிதி அழகிரி குடும்பத்தினருடன் எடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். எனினும் படம் நடிப்பதை தாண்டி பொதுவெளியில் அல்லது சினிமா நிகழ்ச்சிகளில் கூட அதிகம் கலந்து கொள்ளாத நபராக அஜித்குமார் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் தயாநிதி அழகிரி குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். இவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தயாநிதி அழகிரி “சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார்னு.. அவர் கூட இருக்கும்போது ஏற்படும் எனெர்ஜி விளக்கமுடியாதது” என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.