வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 20 ஏப்ரல் 2022 (07:57 IST)

இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்! இணையதள விபரங்கள் அறிவிப்பு

students
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது 
இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
https://rte.tnschools.gov.in/என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள் இன்று முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இலவச மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது