1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Apollo prathap reddy update jayalalitha health status

ஜெயலலிதா உடல் நிலை - பிரதாப் ரெட்டி புதிய தகவல்

Apollo
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் விரும்பும் போது வீட்டிற்கு செல்லலாம் எனவும் அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.


 

 
உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 50 நாளுக்கும் மேல் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடந்த விழாவில் இன்று பேசிய அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டி “ முதல்வர் மிகவும் நலமாக உள்ளார்.  செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு அவர் சாதாரண முறையில் சுவாசிக்கிறார். அவர் விரும்பும் வழக்கமான உணவுகளை அருந்தி வருகிறார். நோய் தொற்று மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, அவர் இன்னும் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவர் விரும்பும் போது அவர் வீட்டிற்கு செல்லலாம்” என அவர் தெரிவித்தார்.
 
அந்த விழாவில், கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அடுத்த கட்டுரையில்
வாட்ஸ் ஆப் வீடியோ கால்: செயல்படாததற்கான காரணங்கள்!!