1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Bank employee excange old notes for commission

கமிஷனுக்கு கட்டு கட்டாக பழைய நோட்டுகள் மாற்றும் வங்கி ஊழியர் - வைரல் வீடியோ

கமிஷனுக்கு கட்டு கட்டாக பழைய நோட்டுகள் மாற்றும் வங்கி ஊழியர் - வைரல் வீடியோ

Bank employee
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியின் பின்புறத்தில், வங்கி ஊழியர் ஒருவர் கமிஷன் வாங்கிக் கொண்டு கட்டு கட்டாக புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.


 

 
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள ஒரு வங்கியில், புதிய ரூபாய் நோட்டுகளை பெற மக்கள் குவிந்திருந்தனர். ஆனால், ரூபாய் நோட்டுகளை கொடுக்கமால் வெகுநேரம் அவர்களை வரிசையில் நிற்க வைத்துள்ளனர். 
 
இதையடுத்து, வரிசையில் நின்ற ஒருவர் வங்கிக்கு பின்னால் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு கடையில், வங்கி ஊழியர் கட்டு கட்டாக ஒருவருக்கு பணத்தை மாற்றி தந்து கொண்டு இருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதை தனது செல்போன் மூலம் வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப் மூலம் பரவ விட்டுள்ளார்.
 
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பலர், லஞ்சம் பெற்றுக் கொண்டு, கட்டு கட்டாக புதிய பணத்தை மாற்றித் தந்த அந்த வங்கி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
நன்றி - நக்கீரன்
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதா உடல் நிலை - பிரதாப் ரெட்டி புதிய தகவல்