1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 23 மார்ச் 2020 (14:20 IST)

அதிக விலைக்கு மாஸ்க் விற்பனை: அப்போலோவுக்கு சீல்!

முகக்கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்த அப்போலோ மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
மேலும், கொரோனா பாதுகாப்பு எச்சரிக்கையாக மக்கள் சானிட்டைசர், முக கவசங்கள் போன்ற மருத்துவ பொருட்களை வாங்க கடைகளில் அலை மோதுகின்றனர். இதை சாதகமாக கொண்டு பல கடைகள் அதிக விலைக்கு இதனை விற்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
 
இந்நிலையில், முகக்கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்த அப்போலோ மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆம், திருப்பத்தூரில் செயல்படும் அப்போலோ மருந்தகம் ரூ.5 மாஸ்கை ரூ.30-க்கும், ரூ.30 ரூபாய் மாஸ்கை ரூ.70-க்கும், ரூ.50 மாஸ்கை ரூ.100-க்கும் விற்பனை செய்ததால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் சீல் வைக்கப்பட்டுள்ளது.