1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 1 அக்டோபர் 2016 (13:09 IST)

முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுக்கும் தளம்? : பரபரப்பு வீடியோ

முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுக்கும் தளம்? : பரபரப்பு வீடியோ

உடல் நலக்குறைவு காரணமாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில்தான் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தவிர அங்கு வேறு யாருக்கும் அனுமதியில்லை. 
 
அவரின் உடல் நலம் குறித்து எந்த தகவலும் வெளியே கசிந்து விடக்கூடாது என்று காவல்துறை அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறார்கள். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்படுகிறது. இதுவரை இப்படியொரு கெடுபிடிகளை சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை எடுக்கும் தளம் இதுதான் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. 
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...