தியேட்டர்களில் புதிய படங்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. அதில், 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் புதிய திரைப்படஙக்ள் வெளியீடு செய்யவுய்ள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும், சமீபத்தில் ஓடிடியில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற சர்பாட்டா பரம்பரை படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதியும், தேவதாஸின் நண்பர்கள் என்ற படம் செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகிறது. #புதியபடங்கள்ரிலீஸ்தேதி அறிவிப்பு