செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2022 (20:09 IST)

முதல்வருக்கு கொரோனா: விரைவில் குணமாக அண்ணாமலை வாழ்த்து

annamalai
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் முதல்வர் விரைவில் குணமாக வேண்டும் என திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் முதல்வர் விரைவில் குணமாக வேண்டும் என்று பதிவு செய்து உள்ளார் 
 
அவர் இது குறித்து கூறியிருப்பதாவது முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டு உள்ளது என்ற செய்தி அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் 
அண்ணாமலை போலவே பல்வேறு கட்சி தலைவர்கள் முதல்வர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.