1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜூலை 2023 (10:13 IST)

மீட்கப்பட்ட நடராஜர், திருஞானசம்பந்தர் சிலை.. மனம் மகிழ்கிறது என அண்ணாமலை டுவிட்..!

நடராஜர், திருஞானசம்பந்தர் சிலை மீட்கப்பட்டதால் எனது மனம் மகிழ்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால தொல்பொருள்களில் 13 பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன. 
 
கடந்த 9 ஆண்டுகளில் பற்பல முயற்சிகளை மேற்கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட நமது பழங்கால பொக்கிஷங்களில் 356 தொல்பொருட்களை மீட்டுத் தந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம். 
 
சமீபத்தில் மீட்கப்பட்ட தொல்பொருட்களில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் சிலை மற்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை ஆகியவை இருப்பதை கண்டு மனம் மகிழ்கிறது
 
Edited by Mahendran