திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2023 (13:16 IST)

தமிழர்கள் என்றும் ஒன்றுபட்ட தேசத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் : அண்ணாமலை

இன்று ஜம்புத் தீவு பிரகடனம் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் எனவும், தமிழர்கள் என்றும் ஒன்றுபட்ட தேசத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் எனவும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
மானமும் வீரமும் செறிந்த மருதுபாண்டியர்கள்,  ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜம்புத் தீவு பிரகடனம் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் இன்று. 
 
1801 ஆம் ஆண்டு, ஜூன் 16 அன்று,  ஆங்கிலேயர்களை எதிர்த்து, மக்கள் அனைவரும் போரிட முன்வர வேண்டும் என்று திருச்சி கோட்டையில் போர்ப் பிரகடனம் செய்தார் சின்ன மருது அவர்கள். ஜாதி மத இன வேறுபாடு களைந்து, மக்கள் அனைவரையும் விடுதலைக்காகப் போராடத் தூண்டியது இந்தப் பிரகடனம். 
 
இந்திய சுதந்திரப் போரின் முதல் எழுத்துப் பூர்வமான ஜம்புத் தீவுப் பிரகடனம், தமிழர்கள் என்றும் ஒன்றுபட்ட தேசத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் என்பதற்கு, வீரம் நிறைந்த எடுத்துக்காட்டாகும்.
 
மருது சகோதரர்களின் தீரத்தையும், விடுதலைக்காகப் பாடுபட்ட நம் மக்களின் தியாகத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்
 
Edited by Mahendran