செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 6 ஜூன் 2022 (22:51 IST)

இராமநாதபுரம் சமஸ்தானம் குடும்பத்தினரை அரண்மனையில் சந்தித்த அண்ணாமலை!

Annamalai
இராமநாதபுரம் சமஸ்தானம் குடும்பத்தினரை அரண்மனையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: 
 
தமிழகத்தின் தொன்மையான மன்னர் பரம்பரையில், இராமநாதபுரம் சமஸ்தானம் முக்கியமானது. 
 
தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும், ஆன்மீகத்திற்கும், தொண்டுகள் பல செய்த ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னருமான ராஜா என். குமரன் சேதுபதி அவர்கள் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினரை அரண்மனை வளாகத்தில் சந்தித்து தமிழக பாஜக சார்பில் ஆறுதல் கூறினோம்.
 
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தக்காரும், தேசிய சிந்தனையாளர் மற்றும் நமது பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் ஆதரவாளரான இளைய மன்னரின் இழப்பிற்கு, காலம்தான் மருந்தாக வேண்டும்.