செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (20:06 IST)

திமுக உடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: அண்ணாமலை

annamalai
திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியுள்ளார்
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திமுகவுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்டது
 
அதற்கு யாருடனும் கூட்டணி வைத்துக்கொண்டு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற அவசியம் பாஜகவுக்கு கிடையாது என்றும் நாங்கள் தனித்தன்மையாக வளர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்
 
மேலும் ஜூலை 18 நவம்பர் 1 என இரு நாட்களில் தமிழ்நாடு நாள் என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள  திமுகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினார்
 
பாஜகவின் ஒவ்வொரு தொண்டனும் திமுகவுடன் கூட்டணி அமைக்க கூடாது என்று விரும்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்