ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (14:48 IST)

4 மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம்: அண்ணாமலை

நான்கு மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

சமீபத்தில் ஐந்து மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் நான்கு மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் தெலுங்கானா தவிர மத்திய பிரதேசம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.  தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி தோல்வி அடைந்து காங்கிரஸ் கட்சி முதல் முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில்  நான்கு மாநிலங்களில் மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்ற  பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக அலுவலகங்களில் தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் அலுவலகங்களில் வெறிச்சோடி காணப்படுகிறது

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  ’நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக நான்கு மாநில தேர்தல் முடிவு வந்துள்ளது என்றும் இந்தியா கூட்டணியின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று தெரிவித்தார்.  3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva