வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (12:18 IST)

காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம்? I.N.D.I.A கூட்டணியில் ஒற்றுமை இல்லையா?

நடைபெற்ற முடிந்த ஐந்து மாநிலங்கள் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது.  தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் அக்கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது

ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் அங்கு ஆட்சியை அக்கட்சி இழக்கிறது. அதேபோல் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையின்மையே காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்  

சமீபத்தில் I.N.D.I.A கூட்டணி அமைக்கப்பட்ட நிலையில் அந்த கூட்டணியின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாமல் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தியது. அதனால் வாக்குகள் சிதறி I.N.D.I.A கூட்டணிக்கு தோல்வி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாநிலத்திலும் I.N.D.I.A கூட்டணி தங்களுக்குள் மாநில அளவில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் ஆனால் அதை செய்ய I.N.D.I.A கூட்டணி தவறிவிட்டது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.  

இதேபோல்  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி செயல்பாட்டால் மத்தியில் ஆட்சியை பிடிப்பது என்பது பகல் கனவாகி விடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்

Edited by Siva