ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 நவம்பர் 2023 (11:21 IST)

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

farmers flood
தமிழ்நாட்டில் உள்ள ஐந்து மாவட்டங்களில் வெள்ள அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உடனடியாக கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் அனைத்து நீர் நிலைகளும் மிக வேகமாக நிரம்பி வருகிறது. எனவே அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வைகை நதியோரம் இருக்கும்  ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்து உள்ளதாகவும் அதனால் உபரி நீர் அதிகமாக திறக்கப்பட வாய்ப்பு இருப்பதால்  மதுரை தேனி திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களில் கரையோரத்தில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லவும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Edited by Siva