1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified வெள்ளி, 26 மே 2023 (12:21 IST)

கருணாநிதி இல்லையெனில் ஆடு தான் மேய்த்து கொண்டிருப்பார்.. ஆ ராசா பேச்சுக்கு அண்ணாமலை பதில்..!

கருணாநிதியால் தான் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி ஆனார் என்றும் இல்லையென்றால் இன்னும் அவர் ஆடுதான் மேய்த்துக் கொண்டிருப்பார் என்றும் ஆராசா பேசியுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். 
 
சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய ஆ ராசா கலைஞரின் பேனாவால் போடப்பட்ட கையெழுத்தால்தான் அண்ணாமலை ஐபிஎஸ் ஆனதாக திமுக பொதுச் செயலாளர் ஆ ராசா பேசினார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கூறியிருப்பதாவது:
 
என் பேனா, என் மை, என் பெற்றோர், நண்பர்கள் மற்றும் எனது ஆசிரியர்கள் அளித்த ஆதரவு. என்னைப்போல் பலர், அடுத்த கட்டத்திற்கு முன்னேறப் பல தியாகங்களைக் கடந்து, பல போராட்டங்களைச் சந்தித்து வந்துள்ளனர்.
 
வசதியாக ஒரு அறைக்குள் அமர்ந்து மற்றவர்களின் சாதனைக்கு உரிமை கொண்டாடுவது, ஸ்டிக்கர் ஒட்டுவது, இவை மட்டுமே திமுகவினரின் பங்களிப்பு என கூறியுள்ளார்.
 
Edited by Mahendran