1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 அக்டோபர் 2022 (09:32 IST)

தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்; அண்ணாமலை

Annamalai
தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஹிந்தி திணிப்புக்கு எதிராக சமீபத்தில் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது என்பதும் இந்த தீர்மானத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் தாய்மொழியாம் தமிழ் பல பள்ளிகளில் பாடமாக கூட இல்லை என்றும் பிற மொழிகள் மட்டுமே பாடமாக இருப்பதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டி வந்தனர் 
 
முதலில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய படிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விட்டு அதன் பின் ஹிந்தியை எதிர்க்கலாம் என்றும் பாஜகவினர் கூறினர் 
 
இந்த நிலையில் திமுக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக பாஜக தலைவர் அறிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திறனற்ற திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 27ஆம் தேதி  தமிழக பாஜகவின் ன் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். திமுகவின் கபட நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்! 
 
Edited by Siva