வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (13:11 IST)

என் பொண்டாட்டி குளிக்க மாட்றா.. விவகாரத்து குடுங்க! – நீதிமன்றத்தில் கதறிய கணவன்!

உத்தரபிரதேசத்தில் மனைவி குளிப்பதில்லை என விவாகரத்து கேட்டு கணவர் கதறிய சம்பவம் வைரலாகியுள்ளது.

நாள்தோறும் நாடு முழுவதும் பல திருமணங்கள் கோலாகலமாக நடந்து வருவது போல சைலண்டாக பல விவாகரத்து சம்பவங்களும் நடந்து வருகின்றன. ஒவ்வொருவரும் விவகாரத்து கோரி குடும்ப நீதிமன்றங்களை நாட பல்வேறு காரணங்கள், சண்டைகள் இருந்து வருகின்றன. ஆனால் உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு விவாகரத்து வழக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன தம்பதியருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன் இனி தன் மனைவியுடன் வாழ முடியாது என விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். பிரச்சினை என்ன என்று விசாரித்தபோது இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லையென்றும் தன் மனைவில் குளிக்காமல் இருப்பதே பிரச்சினை என்று கூறியுள்ளார். இதனால் அவருக்கு தற்போது கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறதாம். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.