திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:14 IST)

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை

கல்லூரி மாணவர்கள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வினை கண்டிப்பாக எழுதியே தீரவேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியதை அடுத்து வரும் 22 முதல் 29 வரை இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன என்று அறிவிக்கப்பட்டது 
 
இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது என்பதும் இம்முறை மாணவர்கள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் எழுத உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் அண்ணா பல்கலைக்கழகம் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரியை அண்ணா பல்கலைக்கழகத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது
 
இமெயில் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும் மாணவர்கள் தற்போது உடனடியாக தங்கள் செல்போன் எண் மற்றும் இ-மெயிலை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது