1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 பிப்ரவரி 2024 (15:39 IST)

சிறு தவறு நடந்துவிட்டது: சீன கொடி விளம்பர சர்ச்சைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்..!

நேற்று பிரதமர் மோடி தமிழக வந்தபோது குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவை அடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் நேற்று முன்னணி ஊடகங்களில் செய்யப்பட்ட விளம்பரத்தில் சீன அடையாள கொடியுடன் அச்சிடப்பட்டு இருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில் இது குறித்து அமிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
நாங்கள் கொடுத்த நாளிதழ் விளம்பரத்தில் சீன அடையாள கொடியுடன் அச்சிடப்பட்டு சிறு தவறு நடந்துவிட்டது. அது, தெரியாமல் நடந்த தவறு. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. 
 
எங்களுக்கு இந்தியாவின் மீது அதிகப் பற்று இருக்கிறது, நான் இந்தியன்தான்.  குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்தது கலைஞர் கருணாநிதி தான். அதன்பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் அழுத்தமாக குரல்  கொடுத்தனர். 
 
இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
 
Edited by Mahendran