ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (09:24 IST)

இந்த வீட்டிலா படித்தார் அனிதா? - உருக்கமான புகைப்படங்கள்

அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தற்போது தமிழகத்தில் பூதாகாரமாய் வெடித்துள்ளது. 


 

 
அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர் சிலரும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. 


 

 
மரணடைந்த அனிதாவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் வாழ்ந்த அந்த ஏழைக் குடிசையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதை பார்க்கும் போது, இந்த வீட்டில் படித்தா அனிதா பனிரெண்டாம் வகுப்பில் ரூ. 1176 வாங்கினார் என ஆச்சர்யமாக உள்ளது. அப்படி எந்த வசதியில் இல்லாமல் இருக்கிறது அந்த குடிசை வீடு.


 

 
பார்ப்பவர் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் அந்த புகைப்படங்களை பலரும் சமூக வலைத்தளங்கள் உருக்கமாக பதிவு பகிர்ந்து வருகின்றனர்.