1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (11:29 IST)

மாஃபா பாண்டியராஜன் மீது புகார் அளித்த அனிதா சகோதரர்

நீட் தேர்வு பிரச்சனையால் உயிரிழந்த அனிதா அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவது போல் அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்டு இருந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது அமைச்சர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனிதாவின் சகோதரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடைசி கட்ட பிரச்சாரம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் பாண்டியராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் மறைந்த அனிதா, அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவது போல டப்பிங் செய்யப்பட்டு உள்ளது
 
இதற்கு திமுக உள்பட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இதற்கு அனிதாவின் சகோதரரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அனிதாவின் சகோதரர் மணிரத்னம் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் 2017ஆம் ஆண்டு உயிரிழந்த அனிதா தற்போது அதிமுகவை ஆதரவு போல் சித்தரித்து வீடியோ வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவர் புகார் பதிவு செய்துள்ளார் இந்த புகார் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.