ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (11:20 IST)

தி இந்து குழும தலைவராக நிர்மலா லக்‌ஷ்மண் தேர்வு: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து..!

தி இந்து குழும தலைவராக நிர்மலா லக்‌ஷ்மண் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
 
தி இந்து குழும வெளியீடுகளின் இயக்குனர்கள் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமிகு.நிர்மலா லக்‌ஷ்மண் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நவீன பின் இலக்கியத்தில் முனைவர் பட்டம் உள்ளிட்ட கல்வித்தகுதிகளும்,  இந்து குழும இதழ்களின் ஆசிரியர்கள் குழுவின்  நாற்பதாண்டுகளுக்கும் கூடுதலான அனுபவமும், தி இந்து ஆங்கில நாளிதழின் இணைப்பிதழ்களில் புதுமைகளை புகுத்திய மற்றும் புதிய இணைப்பிதழ்களை  உருவாக்கிய பார்வையும் தி இந்து குழும இதழ்களை தரத்திலும், இதழியல் அறத்திலும் புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்ல அவருக்கு உதவும். மீண்டும் வாழ்த்துகள்!
 
Edited by Mahendran