Daily Horoscope
✕

அடுத்தடுத்த நாட்களில் சூதாட்ட தற்கொலை: அரசுக்கு அன்புமணி முக்கிய கோரிக்கை

Written By siva
Updated: புதன், 8 ஜூன் 2022 (17:32 IST)
அடுத்தடுத்த நாட்களில் சூதாட்ட தற்கொலை நடந்துள்ளதை அடுத்து தமிழக அரசுக்கு அன்புமணி முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 
 
கரூர் மாவட்டம் தாந்தோனிமலையைச் சேர்ந்த சஞ்சய் என்ற 23வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.  அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் தினமும் நடக்கும் நிகழ்வுகளாக மாறி வருகின்றன.  சென்னையில் பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதற்கு அடுத்த நாளே கரூர் மாவட்டத்தில் அடுத்த தற்கொலை நிகழ்ந்துள்ளது.
 
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பிந்தைய 10 மாதங்களில் நடக்கும் 23-ஆவது தற்கொலை இதுவாகும்.  இது தொடர்கதையாக அனுமதிக்கக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்!
 
 

எல்லாம் காட்டு

28 பேர் தவெகவுக்கு ஆதரவு!.. பழனிச்சாமிக்கு ஆப்பு!.. மூவரணி போடும் பிளான்!...

கோவில்களுக்குள் செல்போனை எடுத்து செல்லலாம்.. ஆனால்.. இந்து சமய அறநிலையத்துறை முக்கிய உத்தரவு..

இன்று தமிழ்நாட்டில் மழை காலம்.. குடையுடன் வெளியே செல்லுங்கள்: பிரதீப் ஜான்

கரப்பான்பூச்சிகளுக்கு திமுக ஆதரவு எப்போதும் உண்டு: முக ஸ்டாலின்

மின்சாரம் விலை!.. ஆந்திராவை விட தமிழகத்துக்கு அதிகம்.. நடந்தது என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments