செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (10:17 IST)

தீண்டாமைக்கு எதிராக போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன்: அன்புமணி

விடுதலைப்  போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாரின் 66-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் அவரது விடுதலை உணர்வையும், தியாகத்தையும் போற்றுவோம் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தீண்டாமைக்கு எதிராக போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-ஆம் ஆண்டு நினைவு நாள்  இன்று கடைபிடிக்கப்படுகிறது. சமூக விடுதலைக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
 
இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரது விடுதலை உணர்வையும், தியாகத்தையும் நாம் அனைவரும் போற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அவர் எந்த இலக்கை அடைய பாடுபட்டாரோ, அந்த இலக்கை அடைவதற்காக உழைக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்!
 
Edited by Mahendran