வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (08:42 IST)

தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக உள்ளன… அன்புமணி ராமதாஸ் பாராட்டு!

தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்புப் பணிகள் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளதாக பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப் பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு பாராட்டுகள் கிடைத்து வரும் சூழலில் பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசைப் பாராட்டியுள்ளார்.

இது குறித்து ‘திமுக அரசு பொறுபேற்று இரண்டு மாதங்கள் ஆகியுள்ளன. இந்த இரண்டு மாதங்களில் கொரோனா தவிர வேறு எதிலுமே கவனம் செலுத்த முடியாத சூழல் இருந்தது. இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்துள்ளது. இரண்டாம் அலைக்கு காரணமே தேர்தல்தான். தமிழக அரசு இரண்டாம் அலையை மிகச் சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. ’ எனக் கூறியுள்ளார்.