ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (12:53 IST)

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த கள்ளச்சாராய விவகாரம்.. எதிர்க்கட்சி எம்பிக்கள் அமைதியோ அமைதி..!

New Parliament
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எதிரொலித்ததை அடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அதற்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பொதுவாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தான் ஒரு பிரச்சனையை எடுக்கும் என்றும் ஆளுங்கட்சி அதற்கு பதில் சொல்லும் என்பது தெரிந்தது. ஆனால் தமிழகத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் குறித்து ஆளும் பாஜக எம்பிகள் இன்று கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு திமுக உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் பதில் கூறாமல் மௌனமாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
குறிப்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தமிழகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இது குறித்து எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று பதில் அளிக்க வேண்டும் என்று பேசினார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் மௌனமாக இருந்தபோது ’வெட்கக்கேடு வெட்கக்கேடு’ என ஆளுங்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran