செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 14 மார்ச் 2022 (13:47 IST)

பள்ளி மாணவர்களிடம் சாதி பெயரை கேட்பதா? - அன்பில் மகேஷ்!

பள்ளி மாணவர்களிடம் சாதி பெயரை கேட்பதா? - அன்பில் மகேஷ்!
பள்ளி மாணவர்களிடம் சாதி பெயரை கேட்பதாக வெளியான தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். 

 
பள்ளி மாணவர்களிடம் சாதி பெயரை கேட்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் எம்.பி.சி, பி.சி. என்ற பிரிவுகளை தான் பதிவு செய்கிறோம். சில அரசு பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி வகுப்பு இல்லை என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட அறிவிப்பில் பள்ளிகளில் வழங்கப்படும் மாற்று சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிட தேவையில்லை என அறிவித்திருந்தது என்பது கூடுதல் தகவல்.