அண்ணாமலையுடன் விவாதம்... பஞ்ச் அடித்து நழுவிய உதயநிதி தோஸ்து!!

Sugapriya Prakash| Last Modified சனி, 19 செப்டம்பர் 2020 (14:51 IST)
அண்ணாமலையுடன் விவாதம் நடத்த நீங்கள் தயாரா? என அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 
 
திமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் அவர்களும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்களும் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் விவாதம் செய்ய இருப்பதாக ஒருவருக்கொருவர் சவால் விட்டனர். 
 
இந்த விவாத தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் தொலைக்காட்சியின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று இந்த விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய முன்வந்தது. 
 
இதற்கான தேதிகளை செந்தில்குமார் மற்றும் அண்ணாமலை ஆகியோர் தனித்தனியாக கொடுத்ததாகவும், அண்ணாமலை கொடுத்த தேதியை செந்தில்குமார் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் செந்தில்குமார் கொடுத்த தேதிகளில் அண்ணாமலை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இதுவே இப்படி இருக்க அதற்குள் அண்ணாமலையுடன் விவாதம் நடத்த நீங்கள் தயாரா? என அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவரோ, வேலியில போற ஓணானை பிடித்து வேட்டிக்குள் ஏன் விட வேண்டும் என பதில் அளித்து நைசாக நழுவினார். 


இதில் மேலும் படிக்கவும் :